[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 09:02 am
  • அ+ அ-

மேஷம்: பண வரவு தாராளமாக இருக்கும். பழைய கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: செயலில் சுறுசுறுப்பு கூடும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் மறையும். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் சேரும். வீட்டுக்கான வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்கும் எண்ணம் உதிக்கும்.

கடகம்: எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்துமோதல் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். 

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். 

துலாம்: தன்னம்பிக்கை பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: திட்டமிட்டக் காரியம் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 

தனுசு: விலகியிருந்த பழைய உறவினர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் எதிர்பாராது கருத்துமோதல்கள் வரும். 

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

கும்பம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மீனம்: புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close