14 முதல் 17 வயது வரை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரர்கள் யார் யார்?


ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் இதுவரை அறிமுகமான இளம் வயது வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்…

வைபவ் சூர்யவன்ஷி: 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025-ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.

பிராயஸ் ராய்: 16 வயது 157 நாட்களில் 2019 சீசனில் ஆர்சிபி அணிக்காக அறிமுகமானார் பிராயஸ் ராய்.

முஜீப்-உர்-ரஹ்மான்: 17 வயது 11 நாட்களில் 2018 சீசனில் பஞ்சாப் அணிக்காக முஜீப்-உர்-ரஹ்மான் அறிமுகமானார்.

ரியான் பராக்: 17 வயது 152 நாட்களில் 2019 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் அறிமுகமானார்.

ஆயுஷ் மாத்ரே: 17 வயது 278 நாட்களில் 2025 சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆயுஷ் மாத்ரே அறிமுகமானார். சென்னை அணிக்காக விளையாடிய இளவயது அறிமுக வீரராக அவர் உள்ளார்.

x