நடப்பு ஐபிஎல் சீசனில் பெரும்பாலான அணிகள் 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் தங்கள் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
1) நூர் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது, 7 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மொத்தம் 144 பந்துகளை வீசி உள்ளார். அதில் 54 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்கவில்லை.
2) குல்தீப் யாதவ்: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
3) கலீல் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு பவுலரான கலீல் அகமது 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவர் அதிக டாட் பந்துகள் வீசிய பவுலர்களில் முதல் இடத்தில் உள்ளார். மொத்தம் 78 டாட் பந்துகள் வீசி உள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தவிர அடுத்த 4 இடத்தில் உள்ள பவுலர்கள் தலா 11 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களது பவுலிங் எகானமி அடிப்படையில் பட்டியலில் இடங்களை பிடித்துள்ளனர்.
4) ஹர்திக் பாண்டியா: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஒரே இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
5) ஷர்துல் தாக்குர்: லக்னோ அணியில் மாற்று வீரராக இடம்பிடித்த ஷர்துல் தாக்குர், 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.