கள்ளக்குறிச்சி நகராட்சியின் அறிவுசார் மையத்தில் பயின்ற 15 பேர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி!


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில், ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கடந்தாண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வருகை தருகின்றனர். வாசகர்களின் கோரிக்கையை ஏற்று காலை 8 முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு எழுதுவோர் இங்கு வந்து, அதற்காக தயாராகி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 9.6.2024 அன்று டின்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசார் மையத்தை பயன்படுத்தி பயின்ற இளையோரில் 15 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். உடன் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

x