‘பார்க்கிங்’ வசதி செய்து தராமல் பழநியில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூல்


பழநி பூங்கா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.

பழநி: ‘பார்க்கிங்’ வசதி செய்து தராமல் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிப் பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், விதிமீறியதாக போலீஸார் அபராதமும் விதிப்பதால் பக் தர்கள் வேதனைப்படுகின்றனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பழநி அடிவாரம் பகுதிக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க, பழநி நகராட்சி சார்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

பழநி பூங்கா சாலை, திருஆவினன்குடி சாலை, குளத்து சாலை, இடும்பன் கோயில் சாலை, அருள்ஜோதி வீதி ஆகிய இடங்களில் பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை காருக்கு ரூ.60, வேனுக்கு ரூ.90, லாரிக்கு ரூ.100, பேருந்துக்கு ரூ.130 வசூலிக்கப்பட்டு வந்தது.

நுழைவு கட்டணம் உயர்வு: இந்நிலையில் சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு நுழைவுக் கட்டணம் உயர்த்தப் பட்டு, தற்போது காருக்கு ரூ.70, வேனுக்கு ரூ.100, லாரிக்கு ரூ.115, பேருந்துக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக அடிவாரப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி மற்றும் அடிவாரம் வழியாக வேறு இடத்துக்கு செல்லும் வாகனங்களையும் விடாமல் விரட்டிச் சென்று வசூலில் ஈடுபடுகின்றனர்.

கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கொடைக்கானல் சாலை வழியாக கிரிவீதிக்கு வரும் வாகனங்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது ஐயப்ப சீசனை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களை ஏமாற்றி நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். நகராட்சி பகுதிக் குள் வராத சிவகிரிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் இருக்கும் கொடைக்கானல் சாலையில் இருந்து பழநி கிரிவீதி பகுதிக்கு வரும் வாகனங்களிடமும் கட்டணம் வசூலிப்பது குறிப்பி டத்தக்கது.

பார்க்கிங் வசதியே இல்லை: நுழைவுக் கட்டணம் வசூலிக்க டெண்டர் விட்ட நகராட்சி, பார்க்கிங் செய்வதற்கு போதிய வசதிகளை செய்து தராமல் கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பழநி தேவஸ் தானம் சார்பில், கிழக்கு ரத வீதி மற்றும் அருள்ஜோதி வீதியில் இலவச சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளது.

தற்போது கொடைக்கானல் சாலையில் ஆவின் பாலகம் எதிரே தேவஸ்தானம் சார்பில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி நகராட்சி சார்பில் எந்த இடத்திலும் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கவில்லை. அதனால், தேவஸ்தான சுற்றுலா வாகன நிறுத்துமிடத்தில் இடம் கிடைக்காதவர்கள்தான் சாலையோர ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்துகின்றனர்.

அங்கேயும் இடம் கிடைக்கா தவர்கள் வாகனத்தை எங்கு நிறுத்துவது எனத் தெரியாமல் விழிக்கின்றனர். சாலையோரங் களில் வாகனங்களை நிறுத்து வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நுழைவுக் கட்டணம் செலுத்தியும் சாலையோரம் நிறுத்தும் பக்தர்களின் வாகனங் களுக்கு விதிமீறியதாக போலீ ஸார் அபராதம் விதிக்கின்றனர்.

கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: ஐயப்ப சீசனையொட்டி, தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழநி அடிவாரப் பகுதிக்கு வந்து செல்கின்றன. தேவஸ்தான 2 சுற்றுலாவாகன நிறுத்துமிடங்களில் 300-க்கும் குறைவான வாகனங்களை மட்டுமே நிறுத்த முடியும். சபரிமலை ஐயப்ப சீசனைத் தொடர்ந்து கார்த்திகை திருவிழா, தைப்பூச விழா என அடுத்தடுத்து விழாக்காலமாக இருப்பதால் பழநி வரும் பக்தர்களின் எண் ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

எனவே, நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி, பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த சூர்யா கூறியதாவது: சபரிமலைக்கு சென்றுவிட்டு பழநிக்கு வந்தோம். நகராட்சி சார்பில் பேருந்துக்கு நுழைவு கட்டணம் வசூலித்தனர். ஆனால், பார்க்கிங் வசதி எங்கு இருக்கிறது என கேட்ட தற்கு பதிலளிக்கவில்லை. சாலையோரத்திலும் ஏராளமான வாகனத்தை நிறுத்தி இருந்ததால் பேருந்தை நிறுத்துவதற்கு இடம் கிடைக்காமல், கொடைக்கானல் சாலையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்தே கோயிலுக்குச் சென்றோம்.

நுழைவுக் கட்டணம் வசூ லிக்கும் நகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி, குடிநீர், கழிப்பறை வசதி என எதுவும் செய்ய வில்லை. பிறகு எதற்கு கட் டணம் வசூலிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். வாகன நிறுத்துமி டங்களை தெரிந்துகொள்ள ஆங்காங்கே அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும், என்று கூறினார்.

x