மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் 'பிக்சல் 8 ஏ' ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் மே 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
கூகுளின் 'ஏ' சீரியஸில் புதிய அறிமுகமாக 'பிக்சல் 8 ஏ' ஸ்மார்ட்போன் களத்துக்கு வருகிறது. டென்சர் ஜி 3 சிப்செட், 7 வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம், ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு மற்றும் ஏஐ-ன் பிற ஏராளமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளி வர உள்ளது.
இந்தியாவில் 'பிக்சல் 8ஏ' ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வகையின் விலை ரூ.52,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'அலோ', 'பே’, 'ஒபிசிடின்', 'பார்ஸலைன்' ஆகிய 4 நிறங்களில் 'பிக்சல் 8 ஏ' கிடைக்கும். இது, 6.1 இன்ச் Full HD+ OLED HDR டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் 2,000 நிட்ஸ் பிரைட்னஸ் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
கேமராக்களைப் பொறுத்தவரை, 'பிக்சல் 8 ஏ' பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS உடன் 64 MP முதன்மை சென்சார் மற்றும் 13 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், அனைத்து செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்பு தேவைகளையும் கையாள முன்புறத்தில் 13 MP ஷூட்டர் உள்ளது.
'பிக்சல் 8 ஏ' பின்புற கேமராக்களிலிருந்து 4K 60fps வரை வீடியோக்களையும், செல்ஃபி ஷூட்டரிலிருந்து 4k 30fps வரை பதிவு செய்யும் திறன் கொண்டது.
'பிக்சல் 8ஏ' ஸ்மார்ட்போனில் 4,492 mAh பேட்டரி, 18 வாட் விரைவு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அலுமினிய பிரேம், வட்டமான விளிம்புகள் கொண்டுள்ளது. மேலும் நீர், தூசி எதிர்ப்பில் ‘IP 67’ மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. கூகுள் 'பிக்சல் 8 ஏ' ஸ்மார்ட்போனை ஃபிளிப் கார்ட்டில் வரும் 14ம் தேதி காலை 6:30 மணி முதல் வாங்கலாம்.