இறங்கிய வேகத்தில் சர்ரென எகிறிய தங்கம் விலை... இனி விலை குறைய வாய்ப்பே இல்லையா?


தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. நாள்தோறும் கிராமுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்து வந்த தங்கம், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, 55 ஆயிரம் ரூபாய் தொட்ட நிலையில், கடந்து சில நாட்களாக குறைவது மற்றும் உயர்வது என போக்கு காட்டி வருகிறது.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு

அந்த வகையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமிற்கு 115 ரூபாயும், சவரனுக்கு 920 ரூபாயும் குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை மேலும் குறையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது.

நேற்று 6,635 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று 80 ரூபாய் உயர்ந்து 6,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 53 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 640 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி நேற்று ஒரு கிராமுக்கு 86 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 50 பைசா உயர்ந்து, 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x