ஒரு சவரன் தங்கம் ரூ.54,040... இன்றும் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்தது!


ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.54 ஆயிரத்தை மீண்டும் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 அதிகரித்து மீண்டும் 54 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மார்ச் 1-ம் தேதி முதலே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. மார்ச் மாதம் 28-ம் தேதி தங்கத்தின் விலை சவரன் 50 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. ஏப்ரல் 15ம் தேதி தங்கத்தின் விலை சவரன் 54 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்றே குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருந்தனர்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு

இந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 45 ரூபாய் உயர்ந்து 6,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக 53 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 54,000 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி

வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 2 ரூபாய் உயர்ந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 88 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

x