இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 2022-ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த கௌதம் அதானி தற்போது 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்திய பணக்காரர்களின் தரவரிசை எண்ணிக்கை 2023-ல் 152 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த நிகர சொத்துமதிப்பு 858.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் 126 பில்லியனர் என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவிகிதம் அதிகரிப்பையும், கடந்த ஆண்டின் சுமார் 739 பில்லியன் டாலர் என்ற மொத்த சொத்து மதிப்பில் 16 சதவிகித உயர்வையும் எட்டியுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பெற்றுள்ளது என்பது நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்துள்ளதையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எழுச்சியையும் காட்டுவதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள மொத்த பிலலியனர்களின் நிகர சொத்து மதிப்பில், நாட்டின் 2 முதன்மையான பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் மொத்த நிகர சொத்து மதிப்பு 25.5 சதவிகிதம் ஆகும்
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, 2022-ல் முதல்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அப்போது அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 4.7 சதவீதம் உயர்ந்து 112.4 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டில் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதுபோல கடந்த 2022-ல் 3ம் இடத்தில் இருந்த அவென்யூ சூப்பர்மார்ட்சின் ராதாகிஷன் தமானியை விஞ்சி, 2023ல் இந்தியாவின் 3-வது பணக்கார தொழிலதிபர் ஆனார் ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார். இவரின் நிகர சொத்து மதிப்பு 29.3 பில்லியன் டாலர் ஆகும். 2022 இறுதியில் 21.75 பில்லியன் டாலராக இருந்த இவரின் சொத்து மதிப்பு 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ராதாகிஷன் தமானி 2023-ல் பிசினஸ் ஸ்டாண்டர்ட் கோடீஸ்வரர் பட்டியலில் 4-வது இடத்திற்கு சரிந்தார். அவரை தொடர்ந்து விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இப்போது இந்தியாவின் 5-வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர மதிப்பு 21.8 பில்லியன் டாலராக உள்ளது.
மேலும் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் உள்ள முதல் 10 பேர் பட்டியலில், ஏசியன் பெயிண்ட்சின் மாலவ் டானி, அம்ரிதா வக்கீல் மற்றும் மனிஷ் சோக்ஸி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் எஸ்.ஷங்வி , பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் , ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் ராஜீவ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
2023-ல் ஐ.பி.ஓ. ஏற்றம் காரணமாக புதிய கோடீஸ்வரர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேன்கைண்ட் பார்மாவைச் சேர்ந்த ரமேஷ் சந்த் ஜுனேஜா இந்தியாவின் 25-வது பணக்கார தொழிலதிபர் ஆனார்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!
அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!
இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!
அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!
13 வயதில் நடந்த பாலியல் தொல்லை... மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!