8000 ரூபாயில் இவ்வளவு வசதிகளுடன் செல்போனா... ஐடெல்லின் அசத்தல் மாடல் அறிமுகம்!


ஐ டெல் ஏ 70 செல்போன்

256 ஜி.பி மெமரி உடன் பல்வேறு வசதிகள் கொண்ட ஐடெல் ஏ70 என்ற ஸ்மார்ட்போனை எட்டாயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் ஐடெல் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஐடெல் நிறுவனம் வரும் வாரங்களில் ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி மெமரி உடன் ரூ.8000-க்கு கீழ் உள்ள முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று ஐடெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 256 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.8000-க்கு கீழ் எந்த நிறுவனமும் அறிமுகம் செய்யவில்லை. எனவே கம்மி விலையில் வரும் இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்ட இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். யுனிசாக் டி603 சிப்செட் வசதியுடன் கூடிய இது ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

3ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது. 13 எம்பி பிரைமரி கேமரா + 0.3 எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளன. அதேபோல் 4ஜி எல்டிஇ ஆதரவு, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டிகளும் உள்ளன.

மேலும் தனித்துவமான பல அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் வெளிவருகிறது என்பதால் இதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

x