அட, இவ்வளவு பேர் தானா?... திருநங்கைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!


திருநங்கைகள்

நாடு முழுவதும் சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் உள்ளபோதிலும் அவர்களில் 15,803 திருநங்கைகளுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருநங்கைகள்

இதுகுறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கை அடையாள அட்டை கேட்டு திருநங்கைக்கான தேசிய இணையதளத்தில் மொத்தம் 24,115 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 15,803 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 4,307 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,478, ஒடிசாவில் 2,237 ஆந்திராவில் 2,124 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள் மற்றும் மிசோரத்தில் திருநங்கை யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, கோவா ஆகிய மாநிலங்களில் முறையே 2, 7, 11 என்ற எண்ணிக்கையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருநங்கைகள்

3,225 விண்ணப்பங்கள் 30 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இந்த நிலுவையைக் குறைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,87,803 பேர் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று தெரிவித்துள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

x