கார்ப்பரேட் அதிரடி... ட்விட்டரின் அரசு விவகாரத்துறையின் இந்திய தலைவர் ராஜினாமா!


ட்விட்டரிலிருந்து சமைரன் குப்தா ராஜினாமா

ட்விட்டர்(தற்போது எக்ஸ் தளம்) சமூக ஊடக வலைதளத்தின் அரசு விவகாரத்துறை தலைவராக, இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கு பொறுப்பு வகித்தவர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவை சேர்ந்த சமைரன் குப்தா என்பார் 2022 பிப்ரவரியில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகே ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது நடந்தது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு மாறிய சூட்டில் பல்வேறு தலைகீழ் மாற்றங்கள் நடைபெற்றன. நிர்வாக சீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், பெரும்பாலான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 80 சதவீதத்துக்கும் மேலான ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு ஆளானார்கள்.

எலான் மஸ்க்

மஸ்கின் அந்த அதிரடி நடவடிக்கையின்போது, பணியை இழக்காத சொற்ப ஊழியர்களில் சமைரன் குப்தாவும் ஒருவர். அந்த வகையில் மஸ்கின் நற்பெயரை பெற்றிருந்த இவர் தற்போது திடீர் ராஜினாமா செய்திருக்கிறார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு சற்று முன்பு வரை, இந்தியாவில் ட்விட்டர் நிர்வாகத்துக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தீவிர மோதல் போக்கு நிலவி வந்தது. அந்த சூழலில், ட்விட்டர் பாணியில் இந்தியாவிலிருந்து குக்கூ என்ற பெயரில் சமூக ஊடக செயலி ஒன்று அறிமுகமானதும், பாஜக ஆட்சி மற்றும் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் அவர்களை பின்பற்றுவோர் எனப்பலரும் ட்விட்டரை புறக்கணித்து குக்கூவுக்கு தாவியதும் நடந்தது.

சமைரன் குப்தா

ஆனால் எலான் மஸ்க் பொறுப்பேற்றதும் சர்வதேச அளவில் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ட்விட்டர் உட்படும் என்பதை தீவிரமாக பின்பற்றியதுடன், அங்கத்திய அரசுகளுடன் இணக்கமாக சென்று விளம்பரங்கள் உள்ளிட்ட வருவாய் பெருக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

இந்த சூழலில் தற்போது சமைரன் குப்தா ராஜினாமா செய்திருப்பது கார்ப்பரேட் உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

x