இந்த ஆண்டின் நீண்ட இரவு இன்றுதான்.. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு!


இரவு

பகல்பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் உள்ள இந்த ஆண்டின் மிக நீண்ட இரவாக இன்று இரவு அமைய உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22ம் தேதி தான் நமது நாட்டில் மிக நீண்ட இரவு நாள். அதன்படி இன்றைய தினம் மிக நீண்ட இரவு நமக்குக் காத்திருக்கிறது. இதை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் Winter Solstice எனக் கூறுகின்றனர். அதாவது வடக்கு அரைக்கோளம் சூரியனில் இருந்து சற்று அதிகம் சாய்ந்திருக்கும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் பகல் நேரம் குறுகியதாகவும் இரவு நேரம் நீண்டதாகவும் இருக்கும். பூமி தினம், தினம் சூரியனைச் சுற்றி வரும் நிலையில், அது அச்சில் 23.4 டிகிரி சாய்ந்துள்ளது. அதேநேரம் அது சூரியனில் இருந்து விலகி இருந்தால் பகல் அதிகமாக இருக்கும். அனைத்து நாட்களுக்கும் 24 மணி நேரம் தான் என்ற போதிலும் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தின் அடிப்படையில் இந்த நீண்ட இரவு நேரம் கணக்கிடப்படுகிறது.

பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில் படாதபோது இந்த இயற்கை அதிசயம் ஏற்படுகிறது. இன்று மாலை சூரியன் மிகச் சீக்கிரமே அடங்கிவிடும். இந்த காலகட்டத்தில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது வெகு அழகாக இருக்கும். முடிந்தால் இன்று மாலையில் அதை ரசிக்கத் தவற வேண்டாம்.


இதையும் வாசிக்கலாமே...
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி!

செய்யாத குற்றத்திற்கு 48 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த கொடுமை!

நெகிழ்ச்சி வீடியோ... சாண்டா கிளாஸாக சென்று சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த அமைச்சர் ரோஜா!

x