புத்தாண்டு ஆஃபர்... ஏத்தர் பைக் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு!


ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

2024-ம் ஆண்டு தொடங்க இன்னும் 12 நாட்களே உள்ளது. இதற்கான கொண்டாட்டத்திற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. புத்தாண்டு ஆஃபரில் பொருட்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏத்தர் நிறுவனம் தனது 450X மற்றும் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அசத்தல் ஆஃபர்களை அறிவித்துள்ளது. பணம் தள்ளுபடி, கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ், இஎம்ஐ மீதான வட்டி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் இந்த சலுகைகள் வழங்கப்படவுள்ளது. ஏதர் 450X மற்றும் 450S ஆகிய இரு மாடல்களுக்கும் கூடுதலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த அனைத்து சலுகைகளும் டிசம்பர் 2023 வரை மட்டுமே இருக்கும்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏத்தர் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையில் அதிகபட்சமாக ரூ. 24,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது ரூ. 5,000 வரை நேரடியாக ரொக்கப் பலன் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ரூ.1,500 வரையிலான கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் இ.எம்.ஐ-களில் குறைந்த வட்டி விகிதம் மூலம் ரூ.12,000 வரை ரொக்க சேமிப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கிரெடிட் கார்டு இ.எம்.ஐ-கள் மூலமும் ரூ. 10,000 வரை கேஷ்பேக் பெறலாம்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

மேலும் ரூ.7,000 மதிப்புள்ள பேட்டரி பேக்கிற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் கூடுதலாக அளிக்கப்படவுள்ளது. வழக்கமாக 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிலோ மீட்டர் வரை இந்த வாரண்டி வழங்கப்பட்டது. தற்போது இது 5 ஆண்டுகள் அல்லது 60,000 கி.மீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x