இந்திய ரிசர்வ் வங்கி 2023-2024 நிதியாண்டிற்கான மூன்றாவது தவணை இறையாண்மை தங்கப் பத்திர (Sovereign gold bond-SGB) விற்பனை தொடங்கியது. வரும் டிசம்பர் 22ம் தேதி இந்த விற்பனைக்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 999 தூய்மையான தங்கத்திற்கான இறுதி விலை ரூ.6,199 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இதில் முதலீடு செய்தால், 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும் என்பது சிறப்பு. இந்த தங்க பத்திரம் வாங்கினால் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. மேலும் இதற்கு ஜிஎஸ்டி வரியும் இல்லை. இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கும் தூய தங்கத்தை வாங்க மிஸ் பண்ண வேண்டாம் என்று பல முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைனில் வாங்க முடியாதவர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களிலும் தங்க பத்திரத்தை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப் பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதனை 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம்.
முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.
இதையும் வாசிக்கலாமே...