அதானி குழுமம், இந்தோ ஆசியன் ( ஐஏஎன்எஸ்) முன்னணி செய்தி நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சொந்தமான குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட், ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஆனால் இந்த பங்குகளின் மொத்த மதிப்பு எவ்வளவு தொகை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
புளூம்பெர்க்குயின்ட் பிரைமில் வணிகம் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை வெளியிடும் குயின்டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவனத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதானி குழுமம் வாங்கியது.
அதன் பிறகு கடந்த டிசம்பரில் என்டிடிவியில் 65 சதவீத பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தையும் அதானி குழுமம் தனதாக்கியது.
ஐஏஎன்எஸ் நிறுவனம் 2022-23ம் நிதி ஆண்டில் ரூ.11.86 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிலையில், அதானி மீடியா நெட்வொர்க் லிமிடெட் (ஏஎம்என்எல்), தேசிய பங்கு சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தி்ல், "ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் நிர்வாகம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் இனி ஏஎம்என்எல் மேற்கொள்ளும்.
ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஏஎம்என்எல் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது
கடந்த 1988ல் முதல் தலைமுறை தொழில்முனைவோராக சரக்கு வர்த்தகத்துக்குள் நுழைந்த கெளதம் அதானி, தற்போது 13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பு தொழில்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவன சாம்ராஜ்யங்களின் உரிமையாளராக விரிவடைந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி, மின் விநியோகம், தகவல் மையங்கள், சிமென்ட், காப்பர் என பலவகைப்பட்ட தொழில்களில் அதானி குழுமம் தடம் பதித்துள்ளது. இது தவிர 5ஜி ஸ்பெக்டரம் ஏலம் எடுத்து தொலை தொடர்பு துறையிலும் அதானி குழுமம் புதிதாக நுழைய உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... தாயை கொன்று சூட்கேசில் வைத்து ரயிலில் பயணித்த மகன்!
சென்னையில் அடுத்த அதிர்ச்சி... சிபிசில் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!