ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1-ம் தேதி முதலே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. குறையும்போது பத்து முதல் 20 ரூபாய் வரை மட்டுமே குறையும் தங்கத்தின் விலை, அதிகரிக்கும் போது 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 50,000 ரூபாயைக் கடக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது.
நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15 ரூபாய் குறைந்து, 6,185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்து 49,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்தபோதும், பொது மக்களிடையே பெரும் கலக்கம் நிலவி வருகிறது. திங்கட்கிழமை முதல் மீண்டும் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டலாம் என்கிற அச்சம் பொது மக்களிடையே நிலவுகிறது. இதனால் ஆபரணத் தங்கம் விரைவில் ஒரு சவரனுக்கு ஐம்பதாயிரத்தை கடக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. நேற்று 79 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ஒரு ரூபாய் அதிகரித்து 80 ரூபாய் 50 பைசாவிற்கு சில்லறை வணிகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...