ஐபோன்-15 வாங்க இதுதான் சரியான நேரம்... அசத்தல் தள்ளுபடி அறிவிப்பு!


ஆப்பிள் ஐ போன் 15

ஆப்பிள் 15 ஐபோனை வாங்க ஆவலோடு காத்திருப்பவர்கள் இப்போது கிடைக்கும் அதிரடி தள்ளுபடி விலையில் உடனடியாக வாங்கலாம்.

கோடிக்கணகானவர்களின் அபிமான மொபைலாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் தனக்கென பிரத்யேகமான பிராண்ட் வேல்யூவை வைத்திருக்கிறது. இளைஞர்களின் பெரும் கனவாக இருக்கும் ஐபோன்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மெகா தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும். அண்மையில் நிறைவடைந்த தீபாவளி பண்டிகை விற்பனையின்போது பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன.

அந்த விற்பனையில் பலரும் ஐபோன் வாங்கி தங்கள் கனவை நனவாக்கிக் கொண்டனர். அப்போது வாங்கத் தவறியவர்களுக்கு இப்போது மறு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது ஐபோன் விற்பனையில் 37 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 ஐபோனை ரூ.80 ஆயிரம் ஆரம்ப விலையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இந்த ஐபோன் தற்போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.37,000க்கும் அதிகமான தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கே இவ்வளவு பெரிய தள்ளுபடி கிடைக்கும்.

அதாவது, பழைய ஐ போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.37,500 வரை சேமிக்கலாம். இதுமட்டுமின்றி, சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் வாங்க ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நோ-காஸ்ட் இஎம்ஐ மூலம் வாங்கினால் ரூ. 5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே இந்த ஐபோனை விரும்புகிறவர்கள் இதனை வாங்க உகந்த நேரம் இதுதான்.

இதையும் வாசிக்கலாமே...


அரசியல் செய்யாதீங்க விஷால்... பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

x