சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து புயல் தாக்கத்திற்கு மத்தியில் இன்ப அதிர்ச்சியை நகைப்பிரியர்களுக்கு கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று 1000 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.47,800க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,975க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்துரூ.5,850ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,320ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 50,560ஆக விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 81.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 81,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!