இந்திய தொழிலாளர்களுக்கு 54% சம்பள உயர்வு கிடைக்கும்... அசர வைக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம்!


ஏ.ஐ தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் போது இந்திய தொழிலாளர்கள் 54 சதவீதம் ஊதிய உயர்வு பெறுவார்கள் என்று அமேசான் வெப் சர்வீஸ்(AWS) அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏ.ஐ தொழில்நுட்பம்

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 97 சதவீத தொழிலாளர்கள் ஏ.ஐ தொழில்நுட்ப திறன் தங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள் என்று கூறியுள்ளது. நிதிச் சேவைகள் முதல் கட்டுமானம் மற்றும் சில்லறை வணிகம் வரை உள்ள தொழில்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் புதுமை மற்றும் உற்பத்தித்திறன் கலாச்சாரத்தை கட்டவிழ்த்துவிட, திறமையான ஏ.ஐ தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை என்று அமேசான் வெப் சர்வீஸின் தலைவர் அமித் மேத்தா கூறியுள்ளார்.

ஏ.ஐ தொழில்நுட்பம்

இந்தியாவில் உள்ள 1,600 தொழிலாளர்கள் மற்றும் 500 முதலாளிகளிடம் இந்த அறிக்கையின்படி ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில், 95 சதவீத இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை விரைவுபடுத்த ஏ.ஐ தொழில்நுட்பம் திறன்களை வளர்த்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் 68 சதவீதம் அதிகரிக்கும் என்று முதலாளிகள் எதிர்பார்ப்பார்க்கிறார்கள் என்றும் அமேசான் வெப் சர்வீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

x