வாரத்தின் முதல் நாளிலேயே குட்நியூஸ்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது!


தங்கம் விலை சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாயும் சவரனுக்கு ரூபாய் 200 ரூபாயும் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வைச் சந்தித்து வந்தது. குறிப்பாக கடந்த வாரத்தில் ஐந்து நாட்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 220 ரூபாய் வரையிலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,760 வரையிலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை கிராமிற்கு பத்து ரூபாய் குறைந்து 6,115 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கம் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம்

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கம் விலை சரிவுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து, 6,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் குறைந்து 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் சற்று சரிவை சந்தித்துள்ளது.

வெள்ளி

கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 30 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளிக்கான விலை 30 பைசா குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால், இந்த வாரம் முழுவதும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

x