இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளதாகவும், இருப்பினும் நாட்டின் தொழில்துறை உற்பத்தியில், அது மூன்றாவது இடம் வகிப்பதாகவும் தொழில்துறைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது
ஏஎஸ்ஐ எனும் தொழில்துறைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், 2021-22 நிதியாண்டு நிலவரப்படி, 39,512 தொழிற்சாலைகளுடன், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக, முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் குஜராத் மாநிலமே முதலிடத்தில் இருப்பதாகவும், தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில், 15.80 சதவீதம் தமிழகத்திலும், 11.90 சதவீதம் குஜராத்திலும் உள்ளது. ஆனால், நாட்டின் தொழில்துறை உற்பத்தியில், 18.01 சதவீதம் அதாவது 21.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன், குஜராத் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா 13.97 சதவீதத்தில் இரண்டாவது இடத்திலும், தமிழகம், 9.73 சதவீதம் அதாவது 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொழிற்சாலைகளில் அதிக ஊழியர்கள் பணிபுரியும் மாநிலமாகவும் தமிழ்நாடு தான் உள்ளது. இருந்த போதிலும், அதிகம் மூடப்பட்ட தொழிற்சாலைகள் எண்ணிக்கையில், தமிழ்நாடு தான் முன்னணி வகிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!
மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!
குட் நியூஸ்... 60 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!
நடிகர் மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்... இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அறிவிப்பு!