ஃபேஸ்புக்கில் தன்னை ‘விற்க’ முன்வந்த இளைஞர்... பொருத்தமான வரன் தேடுவதில் புதுமை


ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் மைக்கேல்

பொருத்தமான காதலியை கண்டடைய ஃபேஸ்புக்கில் ஒருவர் தன்னையே ’விற்க’ முன்வந்திருக்கிறார்.

தகுந்த இணையை கண்டறிவதற்கு நவீன டிஜிட்டல் உலகில் ஆயிரம் உபாயங்கள் உள்ளன. வரன் பார்ப்பதற்கான தளங்கள் மட்டுமன்றி ’டேட்டிங் ஆப்’ என்ற பெயரில் ’வாங்க பழகலாம்’ ரீதியிலான செயலிகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றின் மூலம் இன்றைய யூத்துகள் தங்களுக்கு பொருத்தமான ஜோடியை எளிதில் கண்டடைந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ்

இவற்றின் மத்தியில் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மைக்கேல் என்னும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனக்கான ஜோடியை தேடியிருக்கிறார். இதன்பொருட்டு, ஃபேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸ் பகுதியில் தன்னை பட்டியலிடவும் செய்திருக்கிறார். ஜோடி தேடலில் புதுமையானதாகவும், எளிதானதாகவும் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸை அவர் நாடி இருக்கிறார்.

’மார்க்கெட்பிளேஸ்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் தனது மின் வணிகத்துக்கான சந்தையை கட்டமைத்து வருகிறது. இதில் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் விநியோகப் பொருட்களை பட்டியலிடலாம். மார்க்கெட்பிளேஸ் தளத்தின் மூலம் வாங்குவோர் - விற்போர் எளிதில் சந்திக்க வாய்ப்பாகிறது. இதில் தான் தனது புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்களை சேர்த்திருக்கிறார் மைக்கேல். அங்கே ஆர்வம் தெரிவிப்போருக்கு கூகுள் படிவத்தை அனுப்பி தொடர்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறார்

ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் மைக்கேல்

ஆச்சரியமூட்டும் வகையில் மைக்கேலுக்கு பொருத்தமான நட்பூக்கள் ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் பூத்திருக்கின்றன. பேசிப்பழகி பிடித்திருந்தால் வாழ்க்கையில் இணையவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார் மைக்கேல். ஆனால் தனது வசிப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே ஜோடியைத் தேடுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வகையில் சிறப்பான ஜோடியை தேடித்தர, இதர டேட்டிங் ஆப்ஸை விட ஃபேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸ் உபயோகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x