‘மச்சினிக்கு மாப்பிள்ளையின் மணக்காத முத்தம்’ நெட்டிசன்களை ஏங்கடித்த வைரல் வீடியோ


வைரல் வீடியோவின் காட்சி

மண மேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளைக்கு மச்சினி ஒருவர் அளித்த முத்தமும், அதையொட்டி வைரலான வீடியோ மற்றும் நெட்டிசன்களின் எதிர்வினையுமாக, இணையம் திமிலோகப்பட்டு வருகிறது.

பிறந்த வீட்டாரை விட மணமுடிக்கும் வீட்டாருடனான உறவுகள் அலாதியானவை. திருமண பந்தத்தின் மூலமாக இணையும் இந்த உறவுகளில், எதிர்பாரா நேசம், பாசம் உள்ளிட்டவை பொங்கி வழியும். அந்த வரிசையில் முத்தமும் சேர்த்தி என்கிறது இந்த வைரல் வீடியோ. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பகிர்வோர் மற்றும் சிலாகிப்போர், தங்களது உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மணமேடையில் வீற்றிருக்கும் மணமக்களை இளம்பெண் ஒருவர் அணுகுகிறார். மாப்பிள்ளையிடம் குசலம் விசாரிப்பதுபோல நெருங்குகிறார். மணமக்கள் மட்டுமே அமர்ந்திருக்கும் பிரத்யேக இருக்கையில், இளம்பெண்ணுக்கும் மாப்பிள்ளை சற்று இடம் கொடுக்கிறார். அருகில் அமர்ந்த இளம்பெண் எதிர்பாரா வகையில் மாப்பிள்ளையிடம் முத்தம் பகிர்கிறார். 13 விநாடிகள் மட்டுமே நீடிக்கும் வீடியோவில் இவ்வளவுதான் இருக்கிறது.

ஆனபோதும் மேற்படி வீடியோ இணையத்தில் வெகுவாய் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எங்கே நடந்தது, ஊரென்ன, பேரென்ன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் காணோம். ஆனபோதும் வீடியோ தரும் கிளுகிளுப்புக்காகவே நெட்டிசன்கள் வெகுவாய் அதனை பகிர்ந்து வருகின்றனர். மாப்பிள்ளையிடம் முத்தம் பகிரும் இளம்பெண், மணமகளின் தங்கை என்று இணையவாசிகள் விளக்கம் தந்திருக்கிறார்கள். மணமேடையிலேயே மச்சினியிடம் முத்தம் பெற்ற மாப்பிள்ளை பாக்கியவான் என நெட்டிசன்கள் வயிறு எரிகின்றனர்.

மணமேடையில் முத்தம்

ஆனால் வீடியோவின் இறுதியில், மாப்பிள்ளையிடம் பகிரங்க முத்தம் பகிர்ந்த பெண் முகத்தை சுளித்துக்கொண்டு விலகியதை வெகு சிலரே கவனித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மச்சினிக்கு மணக்காத முத்தம் தந்த மாப்பிள்ளையை பலரும் திட்டித்தீர்த்து வருகின்றனர். அதனூடே தங்களது ஏக்கங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ புதுமாப்பிள்ளையின் வாழ்க்கையில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தகராறுகளை ஒரு அனுபவஸ்தர் அடையாளம் காண முயற்சித்திருக்கார். மற்றபடி, பெரிதாய் காரணம் ஏதுமின்றி சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

மர்ம காய்ச்சலால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... உலக சுகாதார அமைப்பு அலர்ட்!

x