மும்பையில்" வாழை இலைகளைப் பறிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வரும்" என்று வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மாஹிம் சிட்லாதேவி கோயில் வீதியில் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு உள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கைப் பலகை தான் இந்தியா முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக குடியிருப்பாளர் ஒருவர் தோட்டத்தில் வைத்துள்ள எச்சரிக்கைப் பலகையில்," வாலை இலைகளைப் பறிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வரும்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பலகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விசாரித்த போது மஹிம் குடியிப்பாளர் ஒருவர், வாழை இலைகளைத் திருட வேண்டாம் என்று பலமுறை குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளார். ஆனால், அக்குடியிருப்பில் உள்ளவர்கள் அதைக் கேட்காமல் வாழை இலைகளைத் தொடர்ந்து திருடியுள்ளனர். அதனால் தான் வாழை இலைகளைப் பறித்தால் எய்ட்ஸ் வரும் என்று எச்சரிக்கை பலகையை அவர் வைத்தது தெரிய வந்தது.
ஆனால், வாழை மரத்தைப் பாதுகாப்பதற்காக மக்களை அச்சுறுத்தும் வகையில் எய்ட்ஸ் வரும் என்று கூறுவது ஓவர் தான். நோய் எதிர்ப்பு குறைபாட்டாலும், ரத்தம், விந்து மற்றும் பிறப்புறப்பு திரவங்கள் உள்ளிட்டவற்றால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மூலமே எய்ட்ஸ் பரவும் என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்றுக்கு எதிராக இப்படி விளம்பரப் பலகை வைக்கலாமா என்ற எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மர்ம காய்ச்சலால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... உலக சுகாதார அமைப்பு அலர்ட்!