தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், எந்த மாவட்டத்திற்குமே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை தற்போது வரை வரவில்லை. இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இருந்த போதிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் எனவும் ஒரு சில மாவட்டங்களில் மழையை பொறுத்து தலைமையாசிரியர் முடிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். சாரல் மழைக்கே விடுமுறை அளிப்பது போய் இன்று அடை மழைக்கே விடுமுறை இல்லாத நிலையை உருவாக்கிட்டாங்களே என வேதனையும் தெரிவித்துள்ளனர். ஒரு சிலரோ மழை இவ்வளவு பெய்கிறது. வசதி படைத்தவர்கள் காரில் செல்வார்கள், ஏழை குழந்தைகளை நினைத்து பாருங்கள் என பொங்கியுள்ளனர். ஆக மழை தொடர்பான மீம்ஸ்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.