மெட்டாவுக்கு ரூ.24,900 கோடி இழப்பு... ஒன்றரை மணி நேர முடக்கத்தால் பாதிப்பு!


பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்

நேற்று இரவு திடீரென மெட்டாவுக்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு ஓர் இரவில் 24,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செவ்வாய் இரவு திடீரென முடங்கின. இதனால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். பயனர்கள் பலரும் தாங்கள் அணுக முடியாத தளங்களுடனான போராட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டனர். மேலும் தங்களது விரக்தியை மெட்டா நிறுவனத்துக்கு எதிரான கண்டனமாக தெரிவித்தனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் லாகின் பிரச்சினை எழுந்ததோடு, மெட்டா குடும்பத்தைச் சேர்ந்த வாட்ஸ் ஆப் செயலியும் பல நாடுகளில் செயலிழந்தது

பெங்களூரு, டெல்லி, லக்னோ, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பிரதான நகரங்களில் இத்தகைய செயலிகள் முடங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தியா தவிர்த்து பிரேசில், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் முடங்கின. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மெட்டா நிறுவனம் குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்தது. அதன்பின் மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை செயல்பாட்டுக்கு வந்தன.

இந்த நிலையில் ஒன்றரை மணி நேரம் இவை முடங்கியதால் மெட்டா நிறுவனத்திற்கு 24 ஆயிரத்து 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 24,900 கோடி ரூபாயை இதனால் இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

x