ஐயோ! அரசு பேருந்தில் அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி... கயிறு கட்டும் நடத்துநர்; வைரலாகும் புகைப்படம்!


கண்ணாடி கயிறு கொண்டு கட்டும் நடத்துநர்

கடலூரில் அரசு பேருந்து கண்ணாடி பழுதான நிலையில் அதனை நடத்துநர் கயிறு கட்டிக் கொண்டு எடுத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணாடி கயிறு கொண்டு கட்டும் நடத்துநர்

கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு (தடம் எண் 17) அரசு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலுார் அடுத்த வெள்ளகேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் பின்புறம் உள்ள கண்ணாடியின் ரப்பர் பீடிங் சேதமடைந்து கண்ணாடி கீழே விழும் நிலை ஏற்பட்டது.

சுதாரித்து கொண்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பினார். இதையடுத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்ணாடி கீழே விழாமல் இருப்பதற்காக, கயிறு மூலம் கட்டினர். அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை நடத்துநர் கயிற்றால் கட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் பழுதாகி இருக்கிறது. அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில் உடைந்து விழும் நிலையில் இருந்த அரசு பேருந்து கண்ணாடியை நடத்துநர் கயிறு கட்டிச் செல்லும் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

x