ஜெட்வேகத்தில் உயர்ந்த இந்தியாவின் ஜிடிபி... உற்சாகத்தில் மிதக்கும் தொழில்துறை!


ஜிடிபி உயர்வு

இந்திய பொருளாதாரம் 3ம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளதாக புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். கடந்த 2022-23 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதமாக மட்டும் இருந்தது. இந்த நிலையில் தற்போது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடப்பு மூன்றாவது காலாண்டுக்கான தரவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

ஜிடிபி உயர்வு

அதன்படி 2023 - 24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டில் 40.35 லட்சம் கோடியாக இருந்தது. குறிப்பாக கட்டுமான துறையின் 10.7 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து உற்பத்தி துறையில் நல்ல வளர்ச்சி விகிதம் 8.5% காரணமாக ஜிடிபி வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

ஜிடிபி உயர்வு

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நட்சத்திர வளர்ச்சி 8.4 சதவீதமாக இருப்பதற்கு இந்த துறைகளின் வளர்ச்சியும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2023-24ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவீதமாக மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

x