எக்ஸ் தளத்தில் திடீர் ட்ரெண்டாகும் அமைச்சர் கீதாஜீவன்... என்ன காரணம் தெரியுமா?


அமைச்சர் கீதாஜீவன்

’’முட்டையில் தமிழக அரசின் முத்திரை கருப்பு கலர் இருந்தது. குறிப்பிட்ட நாளில் பலத்தமழை பெய்ததால் முட்டைகள் நனைந்து, கருப்பு மை ஊறி முட்டைக்கு உள்ளே கருப்பு கலர் இறங்கியுள்ளது’’ அமைச்சர் கீதாஜீவன் கூறிய நிலையில், அவரை கிண்டலடித்து ’’அழுகியமுட்டை_கீதாஜீவன்’’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஈரோடு, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ‘’சத்துணவில் வாரத்தில் 3 நாட்கள் முட்டை விநியோகம் செய்யப்படுகிறது. பழைய முட்டைகளை பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மூன்று நாட்களும் முட்டையில் தனித்தனி கலர் அடையாளம் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அன்றைய தினம் முட்டையில் கருப்பு கலர் அரசாங்க முத்திரை இருந்தது. குறிப்பிட்ட நாளில் அங்கு பலத்தமழை பெய்ததால் முட்டைகள் நனைந்து, கருப்பு மை ஊறி முட்டைக்கு உள்ளே கருப்பு கலர் இறங்கியுள்ளது. அழுகிய முட்டை எல்லாம் எங்கும் விநியோகிக்கப்படவில்லை’’ என்றார்.

முட்டைக்குள் எப்படி கலர் மை இறங்கும் என நெட்டிசன்கள் அமைச்சர் கீதாஜீவனை கிண்டலடித்து, மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும் எக்ஸ் தளத்தில் #அழுகியமுட்டை_கீதாஜீவன் என்பதையும் ட்ரெண்டாக்கி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

x