தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கிடந்ததைக் கண்டு, அவ்வழியாக வந்த ரயிலை தடுத்து நிறுத்திய வயதான தம்பதிக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 25 ம் தேதி நள்ளிரவு நேரத்தில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. அந்த லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்தது.
லாரி விழுந்த சத்தம் கேட்டதும் அப்பகுதியில் இருந்த வயதான தம்பதி சண்முகையா - வடக்கத்தியம்மாள் மற்றும் காவலாளி சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்டது. தண்டவாளத்தில் லாரி கிடக்கும் நிலையில் ரயில் வந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதை எண்ணி அஞ்சிய அந்த வயதான தம்பதி தங்கள் வீட்டிற்கு ஓடிச்சென்று டார்ச் லைட்டை எடுத்து ரயிலை நோக்கி அடித்து சிக்னல் கொடுத்தனர்.
அதைக் கவனித்த ரயிலின் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினார். அப்போதுதான் தண்டவாளத்தில் லாரி கிடப்பது ரயில் ஓட்டுநருக்கு தெரிய வந்தது. ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பலரும் புதிய தம்பதியை பாராட்டி வந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளார்.
தங்கள் முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்த இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் ஓடிச் சென்று ரயில் விபத்து நேராமல் தடுத்தனர் என்று அவர்களை பாராட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!
தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!