அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தம் - காரணம் இதுதான்!


கூகுள் பே

அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலியில் யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இந்த செயலியை அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் கோடிக்காணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

ஜி பே

இந்த நிலையில் ஜூன் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே

கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே செயலியை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

x