சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி புதிதாக அறிமுகம் செய்துள்ள செல்போன் மாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் ஹை-என்ட் (High-end) ஸ்மார்ட்போன்களை விட பட்ஜெட் போன்களுக்கு (budget mobile phones) தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. சியோமி (Xiaomi), ரெட்மி (redmi), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன.
இந்த வரிசையில் உள்ள புகழ்பெற்ற சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி (Redmi) ஒரு நம்ப முடியாத ஸ்மார்ட்போன் சாதனமாக புதிய 5ஜி ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 14 Pro Max) ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் 8000mAh பவர்ஃபுல் பேட்டரியுடன், 200 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த கேமரா, தரமான செயல்பாடு, அம்சங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வரும் போன்களில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது 6.9' இன்ச் AMOLED டிஸ்ப்ளேயுடன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் இயங்கும். இது ஆண்ட்ராய்டு 13 வகையை சேர்ந்தது. ஆக்டா கோர் ப்ராசஸரால் (Octa core Processor) செயல்படும். இது கேமிங் (Gaming) செய்பவர்களுக்கும் ஏற்றது. இது ஒரு பெரிய சைஸ் 8000mAh பவர்ஃபுல் பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா அம்சத்தை பொறுத்தவரை, இது 200MP பிரைமரி சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32MP இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்னும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், இந்தியாவில் என்ன விலைக்கு விற்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த சாதனம் சுமார் ரூ.36,000 விலைக்கு இந்திய சந்தையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனாக வெளிவரும். 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.