டாட்டா குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு, 365 பில்லியன் டாலரை தாண்டியதில் இந்திய தொழில்துறையினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் பாரம்பரிய நிறுவனங்களில் முக்கியமானது டாட்டா. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே டாட்டா நிறுவனம் பல்வேறு தொழில்களில் சாதித்து வருகிறது. ஒருவகையில் டாட்டா இந்தியாவின் அடையாளமாகவும் விளங்கியது. இந்தியாவில் விமான சேவையை கொண்டு வந்த டாட்டா, பின்னர் அதனை அரசாங்கத்திடம் இழந்து, அண்மையில் திரும்பப் பெற்றிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் அதானி போன்ற நிறுவனங்களோடு டாட்டாவை ஒப்பிட இயலாதது. மக்களின் நன்மதிப்பு, பாரம்பரியம், இந்தியர்களின் அன்றாடத்தோடு இரண்டறக் கலந்தது என டாட்டா குழுமத்தின் தொழிலும், சேவையும் பிணைந்தே வளர்ந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் டாட்டா நீட்டிய உதவிக்கரம் இதற்கு ஓர் உதாரணமாகும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக டாட்டா நிறுவனத்தின் அனைத்துமாக இருந்த ரத்தன் டாட்டா போன்றவர்கள், டாட்டா குழுமத்தின் வளர்ச்சிக்கும், நற்பெயருக்கும் காரணமாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் டாட்டா குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பானது 365 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை தற்போது கடந்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே 341 பில்லியன் அமெரிக்க டாலராகும், ஆனால் அண்டை தேசத்தின் ஜிடிபி-யை விஞ்சி உயர்ந்துள்ளது டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு. இதில் டாட்டாவின் மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் மட்டுமே 170 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இது பாகிஸ்தானி ஜிடிபியின் பாதிக்கு சமம்.
டிசிஎஸ், டாட்டா மோட்டார்ஸ் உட்பட டாட்டா நிறுவனத்தின் 8 நிறுவனங்கள் கடந்த ஓராண்டு காலமாகவே வளர்ச்சியில் பாய்ச்சல் காட்டி வருகின்றன். பங்குச்சந்தைகளில் அவை தங்களது வாழ்நாள் உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்த தகவல் வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் டாட்டா குழும பங்குகளை வாங்குவதில் போட்டி நிலவியது. ஓராண்டாக டாட்டா குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் லாபம் ஈட்டி வருவதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட முதலீட்டாளர் வரை டாட்டா நிறுவனங்கள் வரவேற்பு பெற்று வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
அமித் ஷா மீதான ‘கொலைகாரர்’ அவதூறு... ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து கதவைத் திறக்க முயற்சி... வாலிபரால் பெரும் பரபரப்பு!
10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி!
இனி, ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்... 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!
சிரித்த முகத்துக்கு மாற விரும்பிய மாப்பிள்ளை... உயிரைப் பறித்தது ஹைதராபாத் அறுவை சிகிச்சை