அதிர்ச்சி... தொழிற்சாலையில் மனிதரைக் கொன்றது ரோபோ!


மனிதர் - ரோபோ

தென்கொரியாவில் ரோபோ ஒன்று உடன் பணியாற்றும் மனிதரைக் கொன்ற சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயந்திரமயமாக்கலின் தொடக்க காலம் முதலே மனிதர் - ரோபோ இடையிலான மோதல் குறித்தான கவலைகளும், புரளிகளும் வலம் வருகின்றன. அவ்வப்போது அதனை உண்மையாக்கும் வகையிலான செய்திகளும் வெளியாவதுண்டு. அவற்றில் ஒன்று தென்கொரியாவிலிருந்து நேற்று வெளியாகி உள்ளது.

ரோபோ

தெற்கு கியோங்சாங்கில் உள்ள யோன்ஹாப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, வேளாண் உற்பத்தி பொருட்களை விநியோகத்துக்கு தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. அதிகளவில் ரோபோக்களை கொண்டு செயல்படும் இந்த தொழிற்சாலையில், அந்த ரோபாக்களை கண்காணிக்கும் பணியில் மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில், வேளாண் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை கன்வேயர் பெல்டில் கவிழ்க்கும் பணியில் ஒரு ரோபோ தீவிரமாக இருந்தது. அதன் சென்சார் செயல்பாடுகளை, அதே தொழிற்சாலையில் பணியாற்றும் 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணித்து வந்தார். அப்போது எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தது.

ரோபோ கரம்

அருகில் நின்றிருந்த மனிதரை, தனது நீண்ட இயந்திர கரத்தால் ரோபோ தூக்கி கன்வேயர் பெல்டில் போட்டது. அப்போது ரோபோட்டின் இயந்திர கரம் நசுக்கியதில், அந்த நபர் முகம் மற்றும் மார்பில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில், ’பெட்டிகளில் ஒன்று’ என்ற தவறான கணிப்பில், மனிதரைத் தூக்கி பெல்டில் வீசி ரோபோ கொன்றது தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x