உ.பிக்கு ரூ.13 ஆயிரம் கோடி; தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.2,976 கோடி வரிப்பகிர்வு: மத்திய அரசு விடுவிப்பு!


வரி

மாநிலங்களுக்கான வரி பங்கீடான ரூ.72 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.2,976 கோடியும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 13,088 கோடி ரூபாயும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான மொத்த நிதியாக ரூ72,961 கோடி வரிப்பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி, உ.பி.,க்கு ரூ.13,088 கோடி விடுவிப்பு

பண்டிகை காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதியானது அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீகாருக்கு 7,338 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்திற்கு 5,727 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.

x