டீப்ஃபேக் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு எச்சரிக்கை!


ராஷ்மிகா போலி வீடியோ

போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் சினிமா நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று நேற்று வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண்ணான ஜாரா படேல் என்பவர் கடந்த அக்டோபர் 9-ம் தேதி தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த வீடியோவில் அவரது முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கியிருந்தனர்.

கைது

இந்த வீடியோ வைரலான நிலையில், செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

x