15 ஆண்டுகளாக பொதிகை ரயிலை இழுத்த டீசல் எஞ்சின்... பிரியாவிடை கொடுத்த ஊழியர்கள்!


ஓட்டுநர்களுக்கு பாராட்டு

15 ஆண்டு காலமாக செங்கோட்டையிலிருந்து டீசல் எஞ்சினில் இயங்கிவந்த பொதிகை எக்ஸ்பிரஸ் எஞ்சினுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு 2008 ஆம் ஆண்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தொடங்கியது. கடந்த 15 ஆண்டு காலமாக இந்தத்தடத்தில் டீசல் என்ஜினில் இயங்கி வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்பயணிகள் நலச்சங்கம் சார்பில் பிரியா விடைக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பொறியாளர் கிருஷ்ணன்,சுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புக்கள் வழங்கப்பட்டன. இன்று, நவம்பர் 1 ஆம் தேதி முதல் செங்கோட்டை -சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்குகிறது.

x