300 சொகுசுக் கார்கள், பிரத்யேக ராணுவம், ஜெட் விமானங்கள்... மயக்கம் வரவழைக்கும் மலேசியா புது மன்னரின் சொத்துப் பட்டியல்


மலேசியா சுல்தான் மற்றும் அவரது சொகுசுக் கார்களில் ஒன்று

மலேசியாவின் 17வது மன்னராக இன்று முடிசூடி இருக்கும் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், வாய்பிளக்கச் செய்யும் அவரது சொத்துக்களால் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.

மலேசிய மன்னர் குடும்பத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவரும் அறியாதது. அந்த சொத்துக்கள் மலேசியாவுக்கு அப்பாலும் பரந்து விரிந்திருப்பவை. வெளித்தெரியும் சொத்துக்களின் அடிப்படையில் மலேசியா மன்னரின் சொத்து மதிப்பினை தோராயமாக 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் என ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.

ம்லேசியா மன்னராக இன்று முடி சூடிய சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர்

பல்வேறு சொந்த நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் முதலீடுகள் காரணமாக, விநாடி தோறும் இந்த சொத்துக்களின் மதிப்பு வளரவும் கூடியவை. மலேசியாவின் முக்கிய செல் சேவை நிறுவனங்களில் ஒன்றான யு மொபைலில் 24 சதவீத பங்குகள் இதற்கு ஒரு உதாரணம். வெளித்தெரியும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் முதலீடுகள் மட்டுமே 588 மில்லியன் டாலராகும்.

சிங்கப்பூரில் மலேசியா மன்னர் வைத்திருக்கும் நிலத்தின் மதிப்பு மட்டுமே 4 பில்லியன் டாலர். பரந்து விரிந்திருக்கும் ’டைர்சால் பார்க்’கும் அதில் அடங்கும். மலேசியா சுல்தானின் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ மட்டுமே 1.1 பில்லியன் டாலராக உள்ளது. இதர சாம்ராஜ்யமாக ரியல் எஸ்டேட், சுரங்கத் தொழில்கள், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் உற்பத்தி என பல திசைகளில் விரிந்து பரந்துள்ளது.

சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர்

மலேசியா சுல்தான் குடும்பத்தின் செல்வத்திற்கு முக்கிய சான்றாக, அவரது உத்தியோகபூர்வ இல்லமான ’இஸ்தானா புக்கிட் செரீன்’ உள்ளது. அங்கே 300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அணிவகுத்துள்ளன. அவற்றில் ஒன்று ஹிட்லர் பரிசளித்த பெருமைக்குரியது. தங்கம் மற்றும் நீலம் பாவித்த ’போயிங் 737’ உட்பட தனியார் ஜெட் விமானங்கள் தனியாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தனை சொத்துக்கள் இருப்பதால், சுல்தான் குடும்பத்தினர் பாதுகாப்புக்கு என ஒரு தனியார் ராணுவத்தையும் நியமித்துள்ளார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

x