ரயிலில் இனிமேல் லோயர் பர்த் ஒதுக்கீட்டில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லோயர் பர்த் ஒதுக்குவதில் இனி இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது லோயர் பர்த்தில் வயதான பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இருக்கும்போது மிடில் பர்த்தில் இருப்பவர்கள் பத்து மணிக்கு பின்னர்தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவர் உடன் அமர வேண்டும் என்றும் பத்து மணிக்கு முன்பு மிடில் சீட்டை பயன்படுத்தி தூங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் பத்து மணிக்கு முன்பே தூங்க அனுமதித்தால் தாராளமாக தூங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் 10 மணி வரை காத்திருந்து அதன் பின்தான் மிடில் இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் அப்பர் பர்த்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை கிடையாது, எப்போது வேண்டுமானாலும் அவர் தூங்கிக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் 10 மணிக்கு மேல் லைட்டை எரிய விடக்கூடாது என்றும் ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கனிவு காட்டுவதாக அமைந்திருப்பதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.