7 பொறியியல் கல்லூரிகளில் 5ஜி ஆய்வகங்கள்... மத்திய அரசு திட்டம்!


மாணவர்களின் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் 7 பொறியியல் கல்லூரிகளில் 5ஜி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் உள்ள 7 பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மேம்பட்ட 5ஜி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘’இந்த ஆய்வகங்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 5ஜி சூழலைப் பயன்படுத்தி திட்டங்களைச் செய்ய உதவும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு மேம்பட்ட மொபைல் தொழில்நுட்பங்கள் குறித்த விருப்ப பாடத்தை பல கல்லூரிகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளன.

5ஜி ஆய்வகங்களை உருவாக்குவது, இயக்கம், உற்பத்தி, விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்பாடுகளை உருவாக்க உதவும். ஆய்வகம் அமைப்பதற்கான மூலதன செலவில் 80%, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 100% செயல்பாட்டு செலவினங்களுக்கு அரசாங்கம் நிதியளிக்கும். மூலதனச் செலவில் 20% நிறுவனங்கள் செலவிட வேண்டும்’’ என்றார்.

x