பங்குச்சந்தையில் தொடரும் சரிவு... முதலீட்டாளர்கள் கவலை


பங்குச்சந்தை வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் இந்த ஜனவரியில் வரலாற்று சாதனையாக புதிய உச்சத்தை எட்டி வந்த நிலையில், திடீரென தொடர் சரிவுகளை சந்தித்து வருகின்றன.

நேற்றைய தினம் (ஜன.17) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதே போன்று தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று(கன.18) சந்தைகளின் தொடக்க நிகழ்வுகளின்படி, சென்செக்ஸ் 757 புள்ளிகள் குறைந்து 70,751 ஆகவும், நிஃப்டி 279 புள்ளிகள் சரிந்து 21,292.15 என்பதாகவும் வீழ்ச்சி கண்டன.

பங்குச்சந்தை சரிவு

கடந்த ஒரு மாத இடைவெளியில் முதல் முறையாக சென்செக்ஸ் 71,000 புள்ளிகளுக்கு கீழே சென்றதில் முதலீட்டாளர்கள் பீதி அடைந்தனர். நிஃப்டி, இந்த வார தொடக்கத்தில் அதன் வாழ்நாள் உச்சத்தைத் தொட்ட பிறகு, 22,000-க்கு கீழே சரிந்தது. கூடுதல் இழப்பை தவிர்க்க, முதலீட்டாளர்களில் பலரும் இருப்பை விற்று சந்தையை விட்டு வெளியேற முயன்றதில், சந்தைகள் மேலும் சரிந்து வருகின்றன.

2024-ம் ஆண்டின் தொடக்கம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஆரோக்கியமாகவே தொடங்கியது. ஜன.1 அன்று சென்செக்ஸ் 72,240 புள்ளியிலும், நிஃப்டி 21,741 புள்ளியிலுமாக சுமாரான தொடக்கத்தைக் கொண்டிருந்தன. 2 வாரங்களுக்கு நீடித்த உயர்வு மற்றும் தாழ்வுகளுக்குப் பின்னர், ஜன.16 அன்று 73,128 புள்ளிகளுடன் சென்செக்ஸ் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. நிஃப்டியும் தனது பங்குக்கு ஜன.15 அன்று அதன் வாழ்நாள் உச்சத்தை கண்டது.

பங்குச்சந்தை சரிவு

இந்த சாதனையைத் தொட்ட ஓரிரு நாட்களில், சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டுமாக பெரும் சரிவைச் சந்தித்தன. நேற்றைய தினம் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது; நிஃப்டி 430 புள்ளிகள் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக சந்தைகள் இன்றும் தொடர் சரிவை கண்டு வருகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் காரணமாக ’நிஃப்டி வங்கி’ 2060 புள்ளிகளுக்கு வீழ்ந்தது, சந்தையின் ஒட்டுமொத்த சரிவுக்கு காரணமானது.

இதையும் வாசிக்கலாமே...

x