தங்கம் விலையும் வீழ்ச்சி... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!


Gold Price - Gold Rate - தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சரிவு

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலையும் ஏறி, இறங்கி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை விறுவிறுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாகக் குறைந்து வருகிறது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை சரிவு

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,480-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு 30 குறைந்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்தில், ஒரு சவரன் ரூ.47,500-ஐ தாண்டி விற்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

x