இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பங்கு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இஸ்ரேல் போரை தொடர்ந்து, பங்குச் சந்தை எந்த நேரமும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடக்கத்திலேயே வீழ்ச்சி அடைந்தது, முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 33.98 புள்ளிகள் குறைந்து 66,439 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 6.35 புள்ளிகள் குறைந்து 19,805 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்று ஜொமைட்டோ, நிப்பான் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் டிசிஎஸ், சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.