நடப்பாண்டு நேரடி வரி வசூல் இத்தனை லட்சம் கோடி ரூபாயா? - மத்திய அரசின் ஆச்சரிய தகவல்!


வரி

நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரியாக 14.70 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசுக்கு கார்ப்பரேட் வருமான வரி மற்றும் தனியார் வருமான வரி ஆகியவற்றின் மூலமாக நேரடி நிதி வருவாய் கிடைத்து வருகிறது. இதன்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி 14.70 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாகவும், முழு ஆண்டு இலக்கில் 81 சதவீதத்தை எட்டி உள்ளதாகவும் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் போது இதே காலகட்டத்தில் நிகர வசூலை விட இது 19.41 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த இலக்கில் 81 சதவீதம் வசூலானதாக தகவல்

கடந்த 10ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கார்ப்பரேட் வருமான வரி 8.32 சதவீதமும், தனிநபர் வருமான வரி 26.11 சதவீதமும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 81 சதவீத நிதி வசூல் ஆகியுள்ளதாகவும், இவ்வாண்டு கூடுதலாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலக்கை தாண்டியும் வசூல் இருக்கும் என எதிர்பார்ப்பதாக நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இலக்கை விட 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதலாக வசூலாக வாய்ப்பு

நடப்பாண்டிற்கு இலக்காக 18.23 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வருமான வரியில் பதிவு செய்யப்பட்டிருந்த 2.48 லட்சம் கோடி ரூபாய் நிதி விண்ணப்பித்தவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!

x