இந்தியாவை சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான தலைசிறந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார் என்ற செய்தியை அவரது மகள் நந்தனா சென் மறுத்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக இன்று செய்தி பரவியது. 1998- ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர் அமர்த்தியா சென்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் அமர்த்தியா சென் அங்கு காலமானார் என்ற செய்தி வெளியானது. இதை அவரது மகள் நந்தனா சென் மறுத்துள்ளார். தன் தந்தை நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.