5 நிறத்தில் வாட்ஸ்அப்... அசத்தல் அப்டேட் வெளியிட்டது மெட்டா!


பயனர்களுக்கு பிடித்தார் போல் வாட்ஸ்அப் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அசத்தல் அப்டேட்டினை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் கலர் தீம் அறிமுகம்

இன்று சமூக வலைத்தள நிறுவனங்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது மெட்டா நிறுவனம். அதன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒரு பக்கம் பயனர்களால் வெகுவாக ஈர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. ஆனாலும், இன்றைய காலம் வரை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்தாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பயனர்களின் தேவைக்கு ஏற்பவும், தனது வியாபார யுக்தியின் ஒரு பகுதியாகவும் மெட்டா, வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதன்படி புது புது எமோஜிகள், அவதார் வடிவிலான எமோஜி, வீடியோ காலில் இருக்கும் போதே வாய்ஸ் ஷேர் செய்வது, ஸ்கிரீன் ஷேர் செய்வது எனப் பல வசதிகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப் கலர் தீம் அறிமுகம்

சமீபத்தில் ஒரே வாட்ஸ் அப் செயலியில், இரண்டு கணக்குகளை வைத்துக்கொள்ள முடியும் என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ் அப்பில் இரண்டு எண்களை பயன்படுத்த முடியாமல் தவித்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், பயனாளர்களைக் கவரும் வகையில் செயலியின் வண்ணத்தை மாற்றும் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஐந்துவிதமான நிறத்தில் வாட்ஸ் அப் தீம்-ஐ மாற்றிக்கொள்ள முடியும்.

அதாவது பச்சை, நீலம், வெள்ளை, பிங்க் மற்றும் ஊதா நிறங்களில் இந்த தீம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட் மூலம் நோட்டிபிகேஷன் நிறங்களைக் கூட மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் எழுத்தின் நிறத்தையும் மாற்றுவதற்கான அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x