டெல்லியில் தனி நபர் வருவாய் நடப்பு நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்தியாவிலேயே அதிகபட்சம் ஆகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, சமீபத்தில் கடந்த 2023ம் ஆண்டுக்கான புள்ளிவிவரக் கையேட்டை வெளியிட்டது. தேசிய தலைநகரான டெல்லியின் சமூக, பொருளாதார அளவுருக்கள் குறித்த தரவுகளைக் கொண்ட கையேடாக இது அமைந்துள்ளது. டெல்லி அரசின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறையால் இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், “நடப்பு நிதியாண்டில் டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 529-லிருந்து ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியை விட 158 சதவீதம் அதிகமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தனி நபர் வருவாய் உயர்வானது 2022-23ம் நிதி ஆண்டின் தற்போதைய நிலவரப்படியான முன்கூட்டியான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இது 2023-24ம் ஆண்டுக்கான டெல்லியின் பொருளாதார ஆய்வில் திருத்தப்படும். இந்த தனி நபர் வருவாய் உயர்வு ஆய்வறிக்கையானது டெல்லி சட்டப்பேரவையில் அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனி நபர் வருவாய் உயர்வு குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனிநபர் வருமானத்தில் இந்த உயர்வானது எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு ஆண்டிலும் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே டெல்லி திட்டத் துறை அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள தகவலில், “நாட்டிலேயே மிக உயர்ந்த, குறைந்தபட்ச ஊதியம் டெல்லியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது- இங்கு திறமையற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.17,494-ம், ஓரளவுக்கு திறமையுடையவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,279 மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,215 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அரசு இந்த ஊதியத்தை அதிகரிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு... முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!
முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது... குடியரசு தலைவர் வழங்கினார்!
ஈகோ பார்க்காதீங்க... போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!
251 அடி உயரத்தில் உலகில் உயரமான ராமர் சிலை: சரயு நதிக்கரையில் அமைக்க உ.பி முதல்வர் முடிவு!
4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!