வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் நிறுவனம் வரும் ஏப்ரலுக்குள் 5 முதல் 7 சதவீத பணியாளர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தனது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் வருடாந்திர செயல்திறன் அடிப்படையிலான வேலைக் குறைப்புகளின் ஒரு பகுதியாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃபிளிப்கார்ட் இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது. ஆள் குறைப்பு நடவடிக்கையானது வரும் மார்ச்-ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைந்த்ரா தவிர்த்து 22 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் கடந்த ஆண்டு முதல் புதிய பணி நியமனங்களை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், செலவுகளை கட்டுப்படுத்தவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
தற்போது, தாய் நிறுவனமான வால்மார்ட் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் டாலர் நிதியுதவியை திரட்டும் முயற்சியில் ஃபிளிப்கார்ட் ஈடுபட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இயக்க வருவாய் 42 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ.14,845 கோடியை எட்டியுள்ளது.
மேலும், ஆய்வு தரவுகளின்படி, ஃபிளிப்கார்ட்டின் மொத்த இழப்பு 9 சதவீதம் குறைந்து ரூ.4,026 கோடியாக உள்ளது. மொத்த செலவுகள் 26 சதவீதம் அதிகரித்து ரூ.19,043 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கணிசமான பகுதி தளவாடங்கள், பணியாளர் நலன்கள் மற்றும் விளம்பர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
முரசொலி அலுவலக பஞ்சமி வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு... உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
அம்மாவை தெருவில் விட்டுச்சென்ற மகள்... காப்பகத்தில் சேர்த்த பொதுமக்கள்!
பேச்சுவார்த்தை தோல்வி... நாளை முதல் பேருந்துகள் ஓடாது... தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
1200 வீடுகள் தீக்கிரை... தப்பிய உயிர்கள்... நிர்கதியாய் நிற்கும் அகதிகள்!
படப்பிடிப்பில் நயன்தாரா... திடீரென திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!