உறவுக்குப்பின் பிடித்திருந்தால் திருமணம்... பழங்குடி மக்கள் பின்பற்றும் வினோத பண்பாடு!


பழங்குடி மக்களின் திருவிழா

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பே விருப்பப்பட்டவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட பின் விருப்பம் இருந்தால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் வினோத வழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

பழங்குடியின மக்கள்

உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்வேறு இன பழங்குடி மக்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை சிறிதும் தவறவிடாமல் கடைபிடித்து வாழ்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள் ஆண், பெண் இருவரும் தங்களுக்கு பிடித்தவருடன் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டு அதன் பிறகு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

இந்த பழங்குடியின மக்கள் இதற்காக தனியாக ஏழு நாட்கள் திருவிழா கொண்டாடுகிறார்கள். இதற்காக மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள். திருவிழா நாளில் 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் அங்கு ஒன்றுகூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி விடுகிறார்கள். அதன்பின் திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள தனது விருப்பமான பெண்ணுடன் உடலுறவு கொள்கின்றனர்.

இணையைத் தேர்ந்தெடுத்த ஜோடி

இரவை ஒன்றாக கழிக்கும் இந்த ஜோடிகள், தேவைப்பட்டால் இரவிலேயே அவர்களின் ஜோடியை மாற்றிக்கொள்ளலாம். அப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் தங்கள் இணையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஏழு நாட்கள் தொடரும் திருவிழாவின் இறுதிக்குள் ஜோடியை முடிவு செய்துவிட வேண்டும்.

இணையைத் தேர்வு செய்ததும் ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை வழங்குகின்றனர். உள்ளம் கவர்ந்த இணையை சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவிக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

x